Tuesday, August 30, 2016

திவசம். (திதி )ஏன் செய்கிறோம்?:

🌼திவசம். (திதி )ஏன் செய்கிறோம்


🎈யாத்ரீகனிடம் அன்பர் ஒருவர்
கேட்ட கேள்வி..
....
🎈பதில்..
...
மனிதன்
செய்த பாவத்தை
கணக்கு எடுக்க
முப்பது நாள் தேவைப்படுகிறது
...
அவ்வளவு பாவங்கள்
மனித பிறவியில்
..
பிராணிகளுக்கு
பறவை பட்சிக்கு
திதியோ
திவசமோ தேவை இல்லை
அவை
வந்த வேலை விட்டு
தேவை இல்லாததை
செய்வது இல்லை
...
🎈திதி
என்பது என்ன
..
அவர்களுக்கு பிடித்ததை
அவர்களுக்கு படைப்பது
அதாவது
ஆவிக்கு விருந்து
...
🎈ஒரு உயிர்
உடல் துறந்தவுடன்
அதன்
எண்ண அலைகள்
விருப்ப அலைகள்
நீங்காத கவலைகள்
விலகாத பாசங்கள்
அந்த உடலை
மறக்க முடியாமல்
தவிக்கும் தவிப்பு
இதிலிருந்து
அந்த உயிர் விடுபட
இதற்கு
முப்பது நாள் ...
...
🎈உடல் துறந்த
அந்த
உயிருக்கு
பிரம்மம் நடத்தும் பாடம்
அந்த முப்பது நாள்
...
🎈யாருக்காக
அதர்மம் செய்து
நீ பாவி ஆகி
பொருள் சேர்த்தாயோ
அவர்கள்
மூன்றாம் நாளே
எண்ணெயில் மூழ்கி
பலவகை உணவோடு
உண்ணுவதை பார்க்க வைத்து
எப்படி
உனை மறந்து
உண்டு
தூங்கி
வேற வேலை செய்ய
கிளம்புவதை பாக்க வைத்து
...
🎈பாவம் செய்து
சம்பாதித்து வைத்த
சொத்தை பிரிக்க
அடித்து கொள்ளும்
உறவுகளை பாக்க
...
🎈இறந்தவனை
எத்தனை பேர் திட்டுகிறார்கள்
என்பதை பாக்க
வருந்துவது யார் என அறிய
...
🎈இதற்கு எல்லாம்
முப்பது நாள் வேண்டாமா ??
...
🎈ஆயிரம் ஆண்டு
வாழ்ப்போவது போல
அரண்மனை கட்டி
அதன்
உள் கூட
இறந்த கூடை எடுத்து செல்லாமல்
வெளியை வைத்து
எரிந்து
பிடி சாம்பல் ஆன
அவன்
உடலை
கண்டு
வாழ்ந்த வாழ்க்கை
எவ்வளவு தவறு
என
அந்த உயிர் பார்க்க
அந்த
முப்பது நாள்
...
🎈இறுதியாக
முப்பதாவது நாள்
ஒரு
மகா விருந்துடன்
திதி என்ற பெயரில்
சாந்தி ஆகி போ
என
வழி
அனுப்பி வைக்கிறர்..
....
🎈இன்னும் எவ்வளவோ
எழுதலாம்
....
🎈படிக்கத்தான்
சிரமம்
....
🎈இன்றைய
வேக உலகத்தில
தற்சமயம்
மூன்று நாள் கூட
அந்த
உயிருக்கு
கிடைப்பதில்லை.

No comments:

Post a Comment