Tuesday, August 30, 2016

நீரின் பெருமை

🌺🌺🌺🌺
📝 📝
🌻நீரின்
பெருமை🌻
🌻" நதிக்கரைதனில் நாகரீகம் வளர்ந்தது " என்று நாம் அறிந்திருக்கிறோம்.ஆனால் ஆன்மீகத்தில் " நதிக்கரைதனில் ஞானம் பிறந்தது " என்பதை பல மகான்களின் வாழ்க்கை சம்பவங்களில் நிகழ்ந்த அற்புதங்களைக் காணலாம்.
🌻நீர் உடலைத் தூய்மைப் படுத்துவதற்கும்,
தாகம் தணிப்பதற்கும் மட்டும் அல்ல.
அது ஆன்மாவை அமைதிபடுத்தவும் ,தூய்மைப் படுத்தவும் அமைகிறது.
🌻 நீர்வளம் மிகுந்த இடத்தை மகான்கள் தேர்வு செய்யக் காரணம், நிலவளம் உள்ள இடத்தில் நீர்வளம் அமைகிறது,
நீர்வளம் உள்ள இடத்தில் இயற்கை வளம் அமைகிறது,
இயற்கைவளம் உள்ள இடத்திலே அனைத்து உயிர்களும் மகிழ்வோடு வாழ்கிறது.
🌻இயற்கையாகவே அமைதி தவழும் இடத்திலே இறைவனை வழிபட,
தியானிக்க எளிதாக முடியும்.
🌻மனிதன் புனிதனாக புனிதநதிகள் பெரும்பான்மையான பங்கை வகிக்கிறது.
🌻 நதி சலசலத்து ஒடினாலும்,
அதைச் சற்றுநேரம் நின்று காண்போர்க்கு சலசலத்தமனமும் சத்தமின்றி அடங்குவது விசித்திரமே.
🌻நதி நீர் தன்னலம் கருதாது அனைத்து உயிர்களுக்கும் பயன் தந்து தலைக்கணம் இல்லாது சீறிய பண்போடு சீறிப்பாய்ந்து தன் கடமையை ஆற்றுவது நாம் நதியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஞானமாகும்.
🌻 அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி அவர்கள் பஞ்ச பூதங்களோடு நாம் ஒன்று படுவது உடலுக்கும்,மனதுக்கும்,ஆன்மாவுக்கும் சிறப்பானது என்றும்,
அதில் நீரைப் பற்றி குறிப்பிடுகையில்
* நீரின் பெருமையை மதித்து போற்றுவோம்,
* நீரின் உற்பத்தி ரகசியத்தை அறிவோம்,
* நீரோடு ஒன்றி கலந்து உயிர்கலப்பு பெறுவோம்,
* நீரை பயனுள்ள முறையிலே பயன்படுத்திக் கொள்ளக் கூடிய விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொள்வோம் என்று நீரைப் பற்றி உணர்ந்து உரைத்த வார்த்தைகள் அவை.
🌻அந்த வகையில் மந்திராலயத்தில் அமைந்துள்ள துங்கபத்ரா நதி துள்ளிக் குதித்து கடல் போல அலை அலையாக பாய்ந்தோடுவதைப் பார்க்கையில் நமது மனமும் உற்சாக வெள்ளத்தில் மிதந்தது.
🌻மந்த்ராலயத்திற்கு வழிபட வருவோர் துங்கபத்ரா நதிதனில் நீராடி ஸ்நானம் செய்கின்றனர்.
முடியாதவர்கள் இருகைகளிலும் நீரை அள்ளி நதிக்கான மரியாதையை வழிபாடாக செய்கிறார்கள்.
பெண்கள் சிறு தொன்னையில் அட்சதை,குங்குமம் வைத்து கரையில் அமையப்பெற்ற பாறையை நீரால் சுத்தம் செய்து தொன்னையில் திரி வைத்து அதையே விளக்காக ஏற்றி துங்கபத்ரா நதியை வழிபட்டு பிரார்த்தனை செய்து ஒடும் நீரோடு விடுகின்றனர்.
தீபம் அசைந்து அசைந்து நீரோடு செல்லும் காட்சி பார்ப்பதற்கே அமைதியைத் தருகிறது.
🌻துங்கபத்ரா நதி வற்றாத ஜீவநதியாகஇருப்பதால் மந்திராலயம் ஊர் முந்தைய காலத்தில் ரயில் நின்று அவற்றிற்கு வேண்டிய நீரை நிரப்பிச் செல்லும் நிறுத்தமாக இருந்திருக்கிறது.
மும்பை செல்லும் எண்ணற்ற ரயில்கள் இங்கே சிலநிமிடங்கள் நின்று நீரை நிரப்பிச் செல்கின்றன.
🌻மந்திராலயம் ரயில் பாதை நிறுத்தத்திற்கு முன்பு " Water Station " என்றே பெயர்.
ஆனால் தற்போது இந்த நிறுத்தத்திற்கு " மந்திராலயம் ரோடு " என்று அழைக்கின்றனர்.
🌻துங்கபத்ராவின் செழுமை மந்திராலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் தெரிகிறது.
விவசாயம் நெல்,கடலை,கரும்பு அதிகமாக பயிரிடுகிறார்கள்.
அந்த வயற்பரப்பை கடந்து போகும் போதே கண்களில் பசுமை குளிர்ச்சியத்தருகிறது.
ஆந்திர மக்கள் உணவிலே காரம்,
ஆனால்,
பேச்சில் இனிமை.
கிராம மக்கள் கள்ளமில்லா வெள்ளை மனம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
மகான்ஸ்ரீராகவேந்திரரை இன்றளவும் தங்கள் மனதில் தெய்வமாக கருதி வழிபடுகிறார்கள்.
🌻நூற்றாண்டுகள் பல கடந்தும் (1671 முதல் 2016) இன்று வரை மந்திராலயம் அதே அருளோடும்,ஆற்றலோடும் நிறைந்திருப்பது சாதாரணமல்ல.
மகானின் பூஜா பலமும்,தவவலிமையையும் உணரவைக்கின்றது.
🌻மந்திராலய மகிமை என்ற கட்டுரையை அடியேன் உணர்ந்தவரை பகுதி 6 வரை எழுதி அனைவரோடும் பகிர்ந்து கொள்ள இறையருளும்,குருவருளும் துணைபுரிந்தது எனது பாக்கியமே.
🌻அனைத்திற்கும் மேலாக நண்பர்கள் அனைவருமே இதைப் படித்துவிட்டு தங்களது வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.🙏
மந்திராலய மகிமை கட்டுரை
நிறைவு பெறுகிறது.
குருவே சரணம்
வாழ்க
வளமுடன்.

No comments:

Post a Comment