உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது! அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது! இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது! துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது! ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது! தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது! செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது! பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது! மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது! புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது! தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்! தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்! முயல்வோம்.. வெற்றி பெறுவோம்.
No comments:
Post a Comment