Thursday, March 14, 2019

Best Whatsup Status Quotes

1.Start where you are.Use what you have.Do what you can.
2.The best revenge is massive success.
3.Be so good they can’t ignore you.
4.Each day you have to make a decision.Similarly Will you give up,Give in,Or Give it your all.
5.The difference between the impossible and the possible lies in a man’s determination. Because you can do it.
6.Success is a state of mind.If you want success,So start thinking of yourself as a success.
7.Don’t wait until you reach your goal to be proud of yourself.Be proud of every step you take.
8.The best way to make your dreams come true is to wake up.
9.The biggest source of motivation are your own thoughts,So think big and motivate yourself to win. 
10.Failure will never overtake me if my determination to succeed is strong enough.

Tuesday, March 12, 2019

பாசிட்டிவ் வார்த்தைகளில் வெற்றி

ஒரு எதிர்மறையான கருத்தை வலிமை இழக்கச் செய்ய ஏழு நேர்மறையான வாசகங்கள் தேவை எனும் ஒரு சக்தி வாய்ந்த ஒரு வாசகத்தை ரெனி ஹார்ன்பக்கிள் என்பவர் சொன்னார். ஒருகணம் அதைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.
அது உண்மையாக இருக்க முடியுமா? அத்தனை எளிமையாக இருக்க முடியுமா? ஒவ்வொரு எதிர்மறையான வாசகத்தையும் ஏழு நேர்மறையான வாசகங்களால் ரத்துசெய்துவிட்டு ஒருவனோ ஒருத்தியோ தங்களது விதியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட முடியுமா? இது சோதித்துப் பார்க்கக் கூடியதா?
காத்திருப்பு
நிச்சயமாக. இதைச் சோதனை செய்ய முடியும். நான்தான் இதை நம்புவதற்கு மிகவும் கஷ்டப்பட்ட முதல் நபர். இது பொய்யாக இருக்குமோ என்று ஆராயப் புகுந்து இந்தக் கோட்பாட்டை முழுமையாக நம்பும் முதல் நபராக மாறியதும் நான்தான்.
நான் ஒரு யதார்த்தவாதி. எனவே இந்தக் கூற்றில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று நான் ஆராய்ந்தேன். யாராவது என்னிடம் எதிர்மறையான ஒன்றைக் கூற மாட்டார்களா என்று காத்திருக்கத் தொடங்கினேன்.
எந்த எதிர்மறையான செய்தி வந்தாலும் அதை 7 நேர்மறையான செய்திகளால் ரத்துசெய்துவிட வேண்டும் என்று எனது இதயத்தைத் தயார்செய்து வைத்திருந்தேன். நான் யுத்தத்துக்குத் தயாராக இருந்தேன். நான் பசியுடன் இருந்தேன். என்னால் செய்ய முடியாத ஒன்றை ஒருவர் என்னிடம் கூற வேண்டும் என்று விரும்பினேன். நான் அந்த வேலைக்கு லாயக்கில்லை என்று கூறப்படவும், நான் அத்துணை நல்லவன் இல்லை என்று கூறப்படவும் காத்திருந்தேன்.
வந்தது எதிர்மறை வாசகம்
உங்கள் கனவுகளைக் கொன்று உங்களைப் புறமுதுகிட வைக்க எப்போதும் யாராவது விருப்பத்துடன் இருக்கிறார்கள். ஒரு எதிர்மறை வாசகத்துக்காக நான் அதிகம் காத்திருக்க நேரவில்லை.
நான் கட்ட விரும்பிய வீட்டைக் கண்டறிந்தேன். அதீத மகிழ்ச்சியில் நான் இருந்தேன். அப்போது என் வயது 21தான். அதற்கு முன்பு எனக்கு வீடு கிடையாது. நான்கு படுக்கையறை, இரண்டு கார் காரேஜ்கள் மற்றும் இரண்டு குளியலறைகள் கொண்டதாக எனது வீடு இருக்க வேண்டுமென்று விரும்பினேன்.
என் வீடு பற்றிய திட்டத்தை நான் மிகவும் அன்பு செலுத்தும் ஒரு தம்பதியிடம் காண்பித்தேன். அவர்கள் எனது திட்டம் குறித்து மிகுந்த சந்தோஷம் அடையப்போகிறார்கள் என்று நினைத்தேன். நெஞ்சு நிறைந்த பெருமையுடன் அவர்களிடம் திட்டத்தைக் காட்டி, நான் கட்டப்போகும் வீட்டுக்கான வரைபடம் இதுதான் என்று கூறினேன். அவர்கள் வரைபடத்தைப் பார்த்தார்கள். என்னைப் பார்த்து ஏமாற்றத்துடன் உதட்டைச் சுழித்து, “உன்னைப் பொறுத்தவரை இது பெரிய திட்டம். இதை நடைமுறைப்படுத்த முடியாது. உன்னிடம் கடன் தொகையும் இல்லை. ஒரு சின்ன வீடாக உன் திட்டத்தை ஆரம்பிக்கலாம்” என்றார்கள்.
ஏழு வாசகங்கள்
இதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். இதுதான் எனக்கு அப்போதைய தேவையாக இருந்தது. யுத்தப் பேரிகைகள் ஒலித்தன. போருக்கான சங்குகள் முழங்கின. போர் தொடங்கியது.
நான் என் காரில் ஏறினேன். எனது கண்ணில் கனலுடன், “இது என் வீடு. இந்த வீட்டைப் பெறுவேன். எதுவும் என்னைத் தடுக்க முடியாது. இந்த நிலம் என்னுடையது. நான் அதைக் கட்டுவேன். எனக்கு அது கிடைக்கும்! என்ற உணர்வோடு நான் தேர்ந்தெடுத்த நிலத்துக்கு வண்டியை ஒட்டினேன்.
அந்த நிலத்தைச் சுற்றிவந்து ஏழு முறை சொன்னேன். “இந்த இடத்தில்தான் நான் என் வீட்டைக் கட்டுவேன்! எனக்கு அது கிடைக்கும்!” ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அந்த வீட்டைப் பெறுவதிலிருந்து எதுவும் என்னைத் தடுக்காது என்று நான் நம்பத் தொடங்கினேன்.
நான் வெல்ல முடியாதவனாகவும், இன்னல்களுக்குத் தயாரானவனாகவும் ஆனேன். நான் இந்த நிலத்தில் வாழ்வதைப் பார்த்தேன். நான் கேட்ட எதிர்மறைக் கருத்துகளை உண்மையிலேயே மறந்தே போய்விட்டேன். நான் இந்த வீட்டைக் கட்டுவதைத் தடுக்க எந்த வழியும் சாத்தியமில்லை என்று நம்பத் தொடங்கினேன்.
பலித்தது
எனது வீட்டைக் கட்டக் குறைந்த வட்டியில் பணம் வழங்கப்பட்டது. பல ஆயிரம் டாலர்கள் ஊக்கத்தொகையும் கிடைத்தது. அது நடந்து பல மாதங்களுக்குப் பிறகும் என்னிடம் எதிர்மறையாகக் கருத்து தெரிவித்தவரை நான் மறந்தே போயிருந்தேன். நேர்மறையான கருத்து மற்றும் செயல்களால் அதை முழுமையாக என் மனதிலிருந்து அகற்றியிருந்தேன். அது வேலையும் செய்தது!
என்னால் அத்தனை பெரிய வீட்டை அடைய முடியாது என்று கூறியவர்கள் என்னைப் புண்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள் தங்கள் அனுபவங்களிலிருந்து அதைச் சொன்னார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் எனக்கு உதவி செய்கிறார்கள். அதை ஏற்பது எனக்கு எளிதாகவே இருந்திருக்கும்.
அவர்களது கருத்து தவறு என்று சொல்வதற்கு நான் யார்? நான் அதற்கு முன்பு ஒரு வீட்டை வாங்கியதில்லை; அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். அப்போதைய நிலையைத் திரும்பிப் பார்க்கும் போது அவர்களது ஞானத்துக்கு நான் பணிந்து போவதே புத்திசாலித்தனமாகத் தெரிந்திருக்கும். ஏனெனில் முன்பே நான் சொன்னதுபோல, அவர்கள் தங்களது அனுபவத்திலிருந்து பேசினார்கள்.
ஏழு நேர்மறை வாசகங்கள்
இருந்தாலும் நான் என் இதயத்தை எதிர்மறையான ஒரு கருத்துக்குத் தயாராக வைத்திருந்தேன். எப்படியான கூற்றுக்கும் நேர்மாறாகச் செயல்படுவது என்றும் ஏழு நேர்மறை வாசகங்களால் அதை ரத்து செய்யவும் மனரீதியாக என்னைத் தயார்படுத்தியிருந்தேன். சூழ்நிலை இத்தனை எதிர்மறையாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அப்படி இருந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்.
ஏழு என்ற எண் முழுமையின் எண்ணாகும். உங்களால் முடியாது என்று ஒருவர் ஒருமுறை கூறினால் என்னால் முடியும் என்று ஏழு முறை கூறுவது பற்றி எண்ணிப்பாருங்கள். எவ்வளவு அழகான கருத்து இது! உங்களை யாராலும் தடுக்கவே முடியாது!
யாராவது ஒருவர் இதைப் படித்துவிட்டு, இது வெறும் கட்டுக்கதை, கிறுக்குத்தனமானது, வேலைக்கு ஆகாது, இதெல்லாம் உண்மையல்ல என்று சொல்வார்கள். ஆனால் நான் சொல்கிறேன், இது உண்மை! இது உண்மை! இது உண்மை! இது உண்மை! இது உண்மை! இது உண்மை! இது உண்மை!
(அமெரிக்க தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜானி டி. விம்ப்ரே எழுதி சக்சஸ் ஞான், சென்னை வெளியிட்டுள்ள from the HOOO to doing GOOD எனும் நூலிலிருந்து ) 

Thursday, July 13, 2017

six effective ways to promote your own self-confidence.

Even the greatest leaders lack self-confidence at certain times. Self-confidence is not a static quality; rather, it’s a mindset that takes effort to maintain when the going gets rough. It must be learned, practiced and mastered just like any other skill. But once you master it, you will be changed for the better.
Here are six effective ways to promote your own self-confidence.

1. Act the part.

Your body language can instantly demonstrate self-assuredness, or it can scream insecurity. Present yourself in a way that says you are ready to master or take command of any situation. If you look confident and act the part you aspire to reach, you’ll not only feel in control, people will have much more confidence in you as well.
Hold your head high, sit up straight, gently bring your shoulders back to align your spine and look directly at the other person when interacting. Avoid a limp handshake and maintain good eye contact while someone is speaking to you.

2. Dress the part.

When you look better, you feel better. If you choose clothing and accessories that fit you well, suit your industry and lifestyle, and make you feel good, this will automatically increase your self-esteem. Look like the part you want to play, or in other words, suit up for success. Don’t be afraid to let your personality shine in your accessories. Bold jewelry or a colorful tie can be a focal point and a good conversation starter.

3. Speak assertively.

The next time you listen to your favorite speaker, be mindful of the way he or she delivers a speech. A great speaker speaks confidently, in a steady, rhythmic tone. Instead of the “ums” and “ahs” that interrupt flow, they use pauses to emphasize ideas.
Adopt an assertive, but not aggressive, way of speaking that indicates your self-confidence. You will feel your self-esteem begin to rise. To be taken seriously, avoid high-pitched, nervous chatter or twittering giggles in your speech. People will listen to you more attentively when they see the leader radiate from within you.

4. Think and act positively.

Positive energy leads to positive outcomes, so set your mind to the can-do side of any situation, avoiding the negative self-talk that can make you feel less confident. Smile, laugh and surround yourself with happy, positive people. You’ll feel better and the people with whom you work will enjoy your company.
Keep a gratitude journal to remind yourself of the high points of your day and your accomplishments. You will develop more peace and confidence when you are in a grateful state of mind.

5. Take action.

There’s more to being confident than just how you look. You must act the part. Walk up to a stranger at a networking event, or accept a project you’d normally reject. Practice being self-confident and soon it will become second nature.
Inaction breeds doubt and fear, while action breeds confidence and courage. As an exercise, jot down your strengths and weaknesses. Most people will tell you to work on your weaknesses, but use what you've got and capitalize on your strengths instead. Once you put more energy into your positive traits, your confidence will start to shine through.

6. Be prepared.

Remember the five P’s: Prior planning prevents poor performance. The more prepared you are, the more confident you’ll feel about your expertise and competency. Preparation will help you avoid getting tripped up by life’s unexpected glitches.
Learn everything you can about your industry, your subject matter, your goals and what drives you towards success. Before you start a task, first imagine how you want to feel once you’ve completed it. Don’t try to accomplish too much at once. Break complex tasks up into small, bite-size, manageable pieces.
As U.S. Army General Creighton Williams Abrams Jr. once said, “When eating an elephant take one bite at a time.” If you have patience and perseverance, you are only steps away from a more confident you.

Saturday, December 17, 2016

பங்குச் சந்தை தொடர்பான படிப்புகள்!

பங்குச் சந்தை பற்றி பொது மக்களுக்கு பல மாறுபட்ட கருத்துகள் உண்டு. உண்மையில் பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீட்டுக்கு மற்ற எதிலும் கிடைக்காத  அளவு வருமானம் கிடைக்கும். வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
 National  Stock Exchange  என்ற அகில இந்திய நிறுவனம் பற்றி அனைவரும் அறிவோம். இது நடத்தும் சான்றிதழ் பயிற்சிகள் பெற்றால் நல்ல வேலை வாய்ப்புக் கிடைக்கும்.
இன்று  130 கோடி மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். அதில் 2 கோடி பேருக்கும் கீழே தான் பங்குச் சந்தையில் ஈடுபட "டிமேட்' எனப்படும் கணக்கு வைத்துள்ளனர். மீதி 128 கோடி மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லை.
 தேசிய பங்குச் சந்தை நடத்தும் படிப்புகள்:
• பங்குச் சந்தையின் அடிப்படைகள் (Basics of stock markets)
• தொழில்களில் பங்கு,  கிளீயரிங் & செட்டில்மெண்ட் 
(Derivatives of trading, clearing and settlement)
• அடிப்படை விவரங்கள் (fundamental Analysis) & தொழில் நுட்ப விவரங்கள் (Technical Analysis)
  மேலும், தேசிய  செக்யூரிட்டீஸ் மார்க்கெட் இன்ஸ்டிடியூட் எனும் நிறுவனம் செபி கட்டுப்பாட்டில்  இயங்குகிறது. இது மும்பையில் உள்ளது. இங்கு நடைபெறும் பயற்சிகள்:
• கரன்ஸி குறித்த சான்றிதழ் தேர்வு (Currency Derivatives Certification Exam)
• வட்டி பற்றிய சான்றிதழ் தேர்வு (Interest Rate Derivatives Certification Exam)
• ஷேர் டிரான்ஸ்பர் ஏஜண்ட்ஸ் பற்றிய படிப்பு (Registrars to an issue and - share transfer Agents)
• மியூச்சுவல் பண்ட் விநியோகிக்கும் சான்றிதழ் (Mutual Fund Distribution Certificate Examination)
• டெபாஸிட்டரி ஆபரேசன் ரிஸ்க் நிர்வாகம் (Securities Operations and Risk Management Certification Examination)
• சான்று பெற்ற நிதி ஆலோசகர் தேர்வு (CPFA) - Certified Personal Financial Advisor Exam) என 7 படிப்புகள்  உள்ளன.
இவற்றுக்கு சென்னை, பங்குச் சந்தை அலுவலத்தில்  பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. சனி, ஞாயிறு இருநாட்கள் பயிற்சி உண்டு. +2 படித்திருந்தால் போதும். ஒரு பட்டம் பெற்றிருந்தால் மிக நல்லது. மாணவர்களும்  இதில் படிக்கலாம். படித்தால் தரகு நிறுவனங்களில் 15,000 - 25000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். கமிஷனும் பெறலாம். நாமே பங்குச் சந்தை தரகு நிறுவனம் தொடங்கலாம்.
முழு விவரம் பெற:
National Stock Exchange of India, 123, N.H. Road, Chennai -34. Ph: 28332500 
வலைதளங்கள்: 
1.https://www.nseindia.com/  2. www.sebi. in. 

Wednesday, September 7, 2016

கோபத்தை குறைக்க வழி இதோ

கோபத்தை குறைக்க வழி இதோ , 2 நிமிடம் இதை படிங்க!!!
கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.இதனால் கோபம் உடனே வந்துடுது என்ற
மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். இன்னொருவர், சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். வேறொருவரோ, நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார்.angry
இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம்.அது சரி…நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? என்றதற்கு, அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர்.
கோபம்ன்னா என்ன? கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயல்பட்டால் நட்பு நசுங்கி விடும். உறவு அறுந்து போகும். உரிமை ஊஞ்சலாடும்.
நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன? சவுக்கு எடுத்து சுளீர்…சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க. கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது. இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது.
இந்த பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, ரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது. இதை தடுக்க டாக்டரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம். இதே நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்
இது பொய்யல்ல. சத்தியமான உண்மை இது. இதெல்லாம் நீங்க சொன்னீங்க…உண்மை மாதிரி தான் தெரியுதுன்னு நீங்க சொல்றதும். அப்படியே கோபத்தை குறைக்கறதுக்கும் வழி சொன்னீங்கன்னா நல்லாயிருக்குமேன்னு புலம்புறதும் புரியுது… அப்படி வாங்க வழிக்கு. அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம்.
முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க. அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க. எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க. அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க… ஈகோ பார்க்காதீங்க. நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே. முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க. யார்மேல தவறுன்னு சிந்தியுங்க…
கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும். அப்படி இல்லைன்னா அந்த இடத்தை விட்டு நகருங்க…தனியா உக்காந்து யோசிங்க. அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள். அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க.
அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம். என்ன நடந்துருச்சு பெருசா. என்னத்த இழந்துட்டோம். மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு. அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க. வீட்டு பெரியவர்கள் திட்டும் போது கவனித்திருப்பீர்கள் என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு.
நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரைக் கிழிச்சால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க. அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற கொடிய நோயைப் பரப்பாமல் இருந்தாலே நீங்க அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதரி தான்.
தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. ஒரு செகண்ட் யோசிச்சான்னா தனது முடிவை மாற்றிக்கொள்வான்.
நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான். இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க… கோபம் வரவே வராது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள். கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான். வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்.

Tuesday, September 6, 2016

நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி?

நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி?
தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளது. இவை அனைத்தும் கும்பகோணத்துக்கு அருகிலேயே, அந்நகரை சுற்றி அமைந்திருக்கின்றன. எனவே சரியான முறையில் திட்டமிட்டால் எல்லா ஸ்தலங்களையும் ஒரே நாளில் சுற்றிப்பார்த்து விடலாம்.
1, திங்களூர் (சந்திரன்):
நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இதன் மூலம் பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.30 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 7 மணிக்கு கும்பகோணம் கிளம்பலாம்.
2, ஆலங்குடி (குரு) :
கும்பகோணத்தில் காலை உணவை முடித்துக்கொண்டு 8.30 மணிக்கெல்லாம் ஆலங்குடி கிளம்ப வேண்டும். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடி செல்ல எண்ணற்ற பேருந்துகள் கிடைக்கின்றன. அதோடு கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 30 நிமிடங்களுக்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 9.30 அல்லது 9.45 மணியளவில் கும்பகோணத்திற்கு திரும்பலாம்.
3, திருநாகேஸ்வரம் (ராகு) :
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.45 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி ஆலயம் 100 தூண்களை கொண்ட பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். பின்னர் 11.15 மணிக்கு கும்பகோணம் திரும்ப வேண்டும்.
4, சூரியனார் கோவில் (சூரியன்) :
சூரியனார் கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே நீங்கள் 11.45-க்கு புறப்பட்டால் கூட 12.15 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.45 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
5, கஞ்சனூர் (சுக்கிரன்) சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பேருந்து அல்லது கார் மூலமாக 10 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 1 மணிக்கு முன்பாகவே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் கால் மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :
நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறினால் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 அல்லது 2.15 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். அதன் பின்பு மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.15 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.45 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 4.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
7, திருவெண்காடு (புதன்) :
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 4.30 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் தரிசித்துவிட்டு 5.30 மணிக்கு கிளம்ப வேண்டும்.
8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் அடைந்து விடலாம். இந்த கீழ்பெரும்பள்ளம் கோயிலையும் தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.
9, திருநள்ளாறு (சனி) :
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து 6.15 அல்லது 6.30 மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக 8 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம்.

Wednesday, August 31, 2016

சிகரெட் பழக்கத்தில் இருந்து மீண்டுவருவருவதற்கான சீக்ரெட் டிப்ஸ்.....


 பெரும்பாலும், சாப்பாடு, டீ சாப்பிட்ட பிறகுதான் அதிகமா சிகரெட் அடிப்பாங்க. அந்த நினைப்பு வந்தால், உடனே திசை திருப்ப முயற்சி பண்ணுங்க. ஒரு டம்ளர் தண்ணி குடிங்க. எழுந்து ஒரு ரவுண்ட் நடந்துட்டு வாங்க.
 சாப்பாடு சாப்பிட்டதும், சும்மா உட்கார்ந்து இருக்காமல், ஏதாவது ஒரு வேலையில் உங்க கவனத்தைச் செலுத்துங்க. கொஞ்ச நேரத்தில் சிகரெட் புகைக்கணும்கிற எண்ணம் போயிடும்.
 சிலருக்கு சிகரெட் பிடித்தால்தான் டாய்லட் போக முடியும் என்ற நிலை இருக்கும், இதைக் காரணமாககொண்டே  சிலர் சிகரெட் பிடிப்பார்கள். அவர்கள் முந்தைய நாள் இரவே நன்கு கனிந்த பூவன்பழம் மாதிரியான மலமிளக்கிகளை சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். மறுநாள் சிகரெட்டின் தேவை இருக்காது.
 சிகரெட் தரும் பாதிப்புகளை உங்க வீட்டிலோ, தனி அறையிலோ கண்ணில் படும் இடத்தில் பெரிதாக எழுதிப் படங்களுடன் ஒட்டிவைக்கலாம்.  
 பெட்டிக் கடைப் பக்கம் தயவுசெஞ்சு போகாதீங்க.
உங்க கண் எதிர்ல ஒருத்தர் சிகரெட் பிடிக்கிறார்னா, அவர் நிக்கிற திசைக்கு எதிர்த் திசையில் நடக்க ஆரம்பிச்சிடுங்க.
 'ரொம்ப நாளாச்சே... ஒண்ணே ஒண்ணு மட்டும் அடிப்போமே...’  அப்படிங்கிற வேலையே கூடாது. ஒண்ணு நூறாயிடும். ஜாக்கிரதை!
 சிகரெட் பிடிக்கத் தூண்டும் நண்பர்களின் சகவாசத்தையே துண்டிச்சிருங்க.
 சிகரெட் பிடிக்கத் தோணுச்சுன்னா, பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுங்க. இது உடம்புக்கும் நல்லது. சிகரெட் பிடிக்கணும்கிற எண்ணத்தையும் மறக்க வெச்சிடும்.
 தியானம், யோகா போன்ற நல்ல பழக்கங்கள்ல கவனத்தைத் திருப்புங்க.  மனசை ஒருமுகப்படுத்தி,  நீங்க எடுத்திருக்கும் நல்ல முடிவுக்கு பக்க பலமா இது இருக்கும்.
சிகரெட் பழக்கம், வாழ்க்கையைச் சீரழிச்சிடும் கண்ணுங்களா! விட்டுடுங்க!