பங்குச் சந்தை பற்றி பொது மக்களுக்கு பல மாறுபட்ட கருத்துகள் உண்டு. உண்மையில் பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீட்டுக்கு மற்ற எதிலும் கிடைக்காத அளவு வருமானம் கிடைக்கும். வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
National Stock Exchange என்ற அகில இந்திய நிறுவனம் பற்றி அனைவரும் அறிவோம். இது நடத்தும் சான்றிதழ் பயிற்சிகள் பெற்றால் நல்ல வேலை வாய்ப்புக் கிடைக்கும்.
இன்று 130 கோடி மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். அதில் 2 கோடி பேருக்கும் கீழே தான் பங்குச் சந்தையில் ஈடுபட "டிமேட்' எனப்படும் கணக்கு வைத்துள்ளனர். மீதி 128 கோடி மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லை.
தேசிய பங்குச் சந்தை நடத்தும் படிப்புகள்:
• பங்குச் சந்தையின் அடிப்படைகள் (Basics of stock markets)
• தொழில்களில் பங்கு, கிளீயரிங் & செட்டில்மெண்ட்
(Derivatives of trading, clearing and settlement)
• அடிப்படை விவரங்கள் (fundamental Analysis) & தொழில் நுட்ப விவரங்கள் (Technical Analysis)
மேலும், தேசிய செக்யூரிட்டீஸ் மார்க்கெட் இன்ஸ்டிடியூட் எனும் நிறுவனம் செபி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இது மும்பையில் உள்ளது. இங்கு நடைபெறும் பயற்சிகள்:
• கரன்ஸி குறித்த சான்றிதழ் தேர்வு (Currency Derivatives Certification Exam)
• வட்டி பற்றிய சான்றிதழ் தேர்வு (Interest Rate Derivatives Certification Exam)
• ஷேர் டிரான்ஸ்பர் ஏஜண்ட்ஸ் பற்றிய படிப்பு (Registrars to an issue and - share transfer Agents)
• மியூச்சுவல் பண்ட் விநியோகிக்கும் சான்றிதழ் (Mutual Fund Distribution Certificate Examination)
• டெபாஸிட்டரி ஆபரேசன் ரிஸ்க் நிர்வாகம் (Securities Operations and Risk Management Certification Examination)
• சான்று பெற்ற நிதி ஆலோசகர் தேர்வு (CPFA) - Certified Personal Financial Advisor Exam) என 7 படிப்புகள் உள்ளன.
இவற்றுக்கு சென்னை, பங்குச் சந்தை அலுவலத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. சனி, ஞாயிறு இருநாட்கள் பயிற்சி உண்டு. +2 படித்திருந்தால் போதும். ஒரு பட்டம் பெற்றிருந்தால் மிக நல்லது. மாணவர்களும் இதில் படிக்கலாம். படித்தால் தரகு நிறுவனங்களில் 15,000 - 25000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். கமிஷனும் பெறலாம். நாமே பங்குச் சந்தை தரகு நிறுவனம் தொடங்கலாம்.
முழு விவரம் பெற:
National Stock Exchange of India, 123, N.H. Road, Chennai -34. Ph: 28332500
வலைதளங்கள்:
1.https://www.nseindia.com/ 2. www.sebi. in.