Sunday, July 31, 2016

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள்

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள்:–
1) தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சி யடைபவன்.
2) தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்ப‍வன்.
3) பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்ப‍வன்.
4)உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.
5) தானத்தைக் கேட்கக் கூடாதவனிடம் கேட்பவன்.
6) தற்பெருமை பேசுபவன் அதாவது எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டிருப்ப‍வன்.
7) பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம், பொருளைக் கொண்டு பிழைப்பவன்.
8) பலமில்லாத‌வனாக இருந்துகொண்டு, பலமுள்ள‍வனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.
9) பிறரிடம் இருந்து உதவியோ அல்ல‍து பொருளையோ எதுவாகினும் அதைப் பெற்றுக்கொண்டு, பின் அது தனது 'நினைவில் இல்லையே...' என்று சொல்பவன்.
10) தனது விந்தினை வேறு நிலத்தில் சிதற விடுபவன்... அதாவது பிறர் மனைவியரை அடைபவன்.
11) தனது மனைவியைக் குறித்து அவனே பிறரிடம் தவறாகப் பேசுபவன்.
12) தனது அச்சங்கள் அனைத்தும் தனது மருமகளால் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.
13) மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிட ம் கேலி செய்பவன்.
14) அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.
15) தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.
16) புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அதைத்தானே சொல்லித் தற்பெருமை பேசுபவன்.
17) எதிரிகளிடம் சரணடைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.
ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர் என்று விதுரர் கூறியுள்ளார்.
மகாபாரதத்தில் கௌரவ, பாண்டவர்களின் சித்தப்பா விதுரர் ஆவார். இவர் மதிநுட்பம் மிகுந்த அமைச்சராக தனது அண்ண‍ன் திருதராஷ்டர‌ரின் அவையில் இருந்தவரும் பீஷ்மரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாவார்

சொர்க்கம் என்றால்என்ன ?நரகம் என்றால்என்ன?

ஒரு சமயம் குரு நானக் சொர்க்கம் என்றால்என்ன ?நரகம் என்றால்என்ன?என்று அறிய கடவுளை காண சென்றார்.
குரு நானக் தன் மனதில் எழுந்த கேள்வியை கடவுளிடம் கூறினார்.
இதை கேட்ட கடவுள் மென்மையாக சிரித்துவிட்டு "அதோ தெரிகிறது பார் ஒரு கதவு அதை திறந்து பார் உன்னுடைய கேள்விக்கான விடை கிடைக்கும்" என்று கூறினார்.
குரு நானக் பெயர் ஏதும் எழுதபடாத அந்த கதவை திறந்துபார்த்தார்.
அங்கு ஒரு மேடையின் மீது நிறைய வித்தியாசமான ருசிமிக்க உணவுகளும், அபூர்வ வகை பழங்களும் மற்றும் நிறைய அமுத பானமும் இருந்தன.
அந்த மேடையை சுற்றி மனிதர்கள் மிகவும் துன்பத்துடன் இருந்தனர். அவர்கள் கையில் மிக நீண்ட கைப்பிடியுள்ள கரண்டி இருந்தது.
அவற்றை கொண்டு அந்த உணவுகளை மனிதர்கள் சாப்பிட துடித்தனர் ஆனால் மிக நீண்ட கரண்டி என்பதால் அவர்களால் உணவுகளை வாயருகே கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர்.
இந்த காட்சியை கண்ட குரு நானக் அதிர்ச்சி அடைந்தார். இது தான் நரகம் என்று அறிந்தார்.
மீண்டும் கடவுளிடம் சென்று, "நான் உண்மையான நரகத்தை பார்த்துவிட்டேன், சொர்க்கம் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும்" என்று சொன்னார்.
கடவுள் அதே கதவை திறந்து பார் என்றார். குரு நானக் மீண்டும் அந்த பெயர் இல்லாத கதவை திறந்தார்.
அங்கு அவர் கண்ட காட்சி அவரை ஆனந்தத்தில் மூழ்கடித்தது.
அங்கும் ஒரு மேடையின் மீது ருசி மிக்க உணவு வகைகளும், அரிய பழ வகைகளும் மற்றும் அமுத பானமும் நரகத்தில் இருந்தது போலவே மிக நீண்ட கைப்பிடியுள்ள கரண்டி தான் இருந்தது.
ஆனால் அங்கு மனிதர்கள் ஒருவர் கரண்டியை கொண்டு மற்றவருக்கு ஊட்டி தானும் மற்றவர் கரண்டியால் ஊட்டும் உணவினை உண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
இதை கண்ட குரு நானக் இதுவே சொர்க்கம் என்று மனம் தெளிந்தார்.
பிறகு கடவுளிடம் வந்து, "சொர்க்கம் எது ? நரகம் எது ? என்பதை நான் நன்கு அறிந்து கொண்டேன்" என்றார்.
கடவுள் மிக்க மகிழ்ச்சி என்று சொல்லி "சொர்க்கமும் நரகமும் வாழும் நம் வாழ்கையில் தான் உள்ளது. " நரகத்தில் தான் மட்டும் உண்ண வேண்டும் என்று சுயநலத்துடன் நினைப்பதால் அவர்களால் அந்த நீண்ட கரண்டியை கொண்டு உணவை சாப்பிட முடியாமல் துன்பம் அடைகிறார்கள்,
அதே சொர்க்கத்தில் அந்த நீண்ட கரண்டியை கொண்டு சுயநலம் இன்றி மற்றவர்களுக்கு அந்த கரண்டியை கொண்டு ஊட்டி தானும் அதன் மூலம் பயன் அடைகிறார்கள்.
இதில் இருந்து நாம் அறியும் உண்மை மற்றவர்களை வாழவைத்து, நாமும் அதன் மூலம் வாழ்வதுதான் உண்மையான சொர்க்கம்.
இந்த உண்மையின் தத்துவத்தை அனைவருக்கும் நீ எடுத்து கூறுவாயாக", என்று கடவுள் குரு நானக்கிடம் சொன்னார்.
அதனை குரு நானக் அவர்களும் பின்பற்றி மற்றவர்களுக்கும் எடுத்து சொன்னார்.

ஆண்டவன் போடும் கணக்கு அது புரியுமா நமக்கு?

ஆண்டவன் போடும் கணக்கு அது புரியுமா நமக்கு!
ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே… அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்க்கு பதிலளித்த இறைவன், “எனக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்கு பதிலாக நீ நிற்கலாம். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும். யார் என்ன சொன்னாலம் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ ஒரு சாமி விக்ரகம் என்பதை மறந்துவிடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூற, அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.
அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு, கோவில் கர்ப்ப க்ரஹத்தில் இவர் நிற்க, இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்று கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தான். முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான். செல்லும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான். இதை கர்ப்ப க்ரஹத்தில் இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருக்கும் நம் ஹீரோ பார்க்கிறார். ஆனால், இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்படியே அசையாது நிற்கிறார்.
சற்று நேரம் கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ரட்சிக்கவேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படை தேவைகள் கூட கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயாக பார்த்து ஏதாவது எனக்கு ஒரு வழி சொல்” என்று மனமுருக கண்களை மூடி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்துகொண்டான்.
சில வினாடிகள் கழித்து கண்ணை திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது. உள்ளே பணத்தை தவிர தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக்கொள்கிறான்.
இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருந்த, அந்த சேவகரால் இப்போதும் எதுவும் சொல்லமுடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையை தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்.
அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல, நம் ஹீரோ உடனே இறைவனை நினைத்துக்கொள்கிறார். “இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த நம் பணியாள் நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையை கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.
இரவு வருகிறது. கோவில் நடை சாத்தப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில் நின்றுகொண்டிருந்த நம் பணியாளிடம் இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.
இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார். என்னடா இது, நம்மை பாராட்டுவான் என்று நினைத்தால் இப்படி கோபித்து கொள்கிறானே என்று பணியாள் துணுக்குற்றான்.
“நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்துகொள்ளவில்லை….? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்….? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? ”
இறைவன் தொடர்ந்து பேசலானான்…. “செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளை தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதை கொடுத்தான்.
இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்.
இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.சேவகன், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்.
“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.” என்றான் இறைவன் புன்னகைத்தபடி.

கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர்

கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர்,,,
சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது கண்திருஷ்டி
நம் உடலில் ஏழு சக்கரங்கள உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும்.
மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகுமாம். அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும். இதற்கு பரிகாரம் கடல் தண்ணீர்
கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.
எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து நம்முடைய உடலில் உள்ள சப்த சக்கரங்களை* பலப்படுத்தும்..
அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும். அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும்.
கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும்.
*ஸ்ரீராமர்* பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, *கடல் நீரே விசேஷமானது* என்றார் ஸ்ரீராம பிரபு!!!

மக்களுக்கு தெரியாத சில முக்கியமான சட்ட பிரிவுகள்

1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)
2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217
3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404
4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166
5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.
6, சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2)
7, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.
8, இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.
9, இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43
10, ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.
11, காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)
12, கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.
13, தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.
14, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)
15, அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)
16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)
17, பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.
18, பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.
19, முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267
20, அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403
21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.
22, தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96
23, பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை. IPC-295
24, மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295
25, ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல். 3 ஆண்டு சிறை IPC-419
26, ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.
27, சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484
28, கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494
29, முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை. IPC-495
30, IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட
இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

நெல்சன் மண்டேலா - வரலாற்று நாயகர்!

உலக வரலாற்றில் சுதந்திர போராட்டம் என்பதை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சமஉரிமைக்காகவும், சமத்துவத்திற்க்காகவும் வேண்டி மேற்கொள்ளப்படும் சுதந்திர போராட்டம். மற்றொன்று அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு சொந்த ஆட்சி அமைக்க வேண்டி மேற்கொள்ளப்படும் சுதந்திர போராட்டம். இந்த இரண்டு வகை சுதந்திரத்திற்க்காகவும் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து போராடியவர்கள் ஏராளம். அவர்களில் மூவரின் பெயர்களை இருபதாம் நுற்றாண்டு வரலாறு பொன் எழுத்துகளால் பொறித்து வைத்திருக்கிறது. ஒருவர் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை ஒழித்து இந்திய மண் சுதந்திர காற்றை சுவாசிக்க வழி வகுத்து தந்த அண்ணல் காந்தியடிகள். அடுத்தவர் அமெரிக்காவில் நிறவெறி ஒழிய தன் உயிரை பரிசாக தந்த மார்ட்டின் லூதர் கிங். அந்த இருவரையுமே ஏற்கனவே நமது வரலாற்று நாயகர்கள் தொடரில் சந்தித்துவிட்டோம். அவர்கள் இருவருக்குமே துப்பாக்கி குண்டுகளைத்தான் உலகம் பரிசாக தந்தது.
இருபதாம் நூற்றாண்டு வரலாறு நினைவில் வைத்திருக்கும் மூன்றாமவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். அவரை வாழும் காந்தி என்றுகூட சிலர் வருணிக்கின்றனர். அவர்தான் நவீன இருபதாம் நூற்றாண்டில்கூட இன ஒதுக்கல் என்ற அசிங்கத்தால் இருண்டு போயிருந்த தென்னாப்பிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கருப்பினத்தவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா (Nelson Mandela). தன் கொள்கைக்காக 27-ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதைதான் நெல்சன் மண்டேலாவின் கதை. 1918-ஆம் ஆண்டு ஜுலை 18-ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் Transkei என்ற பகுதியில் தெம்பு (Thembu) இனத்தலைவருக்கு மகனாக பிறந்தார் நெல்சன் மண்டேலா. ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை முட்புதர்கள் நிறைந்த ஒன்றாகத்தான் இருந்தது.
சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைப்படுத்தப்படுவதையும், கேவலமாக நடத்தப்படுவதையும் பார்த்து சிறுபான்மை வெள்ளையினத்தவரின் ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும் என்ற உணர்வு அவருக்கு சிறுவயதிலிருந்தே மனத்தில் பதிந்தது. Fort Hare-பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது ஒருமுறை மாணவர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக அவர் அந்தக்கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் நெல்சன் மண்டேலா கல்வியை கைவிடவில்லை. Witwatersrand-என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் Walter Sisulu என்ற நண்பருடன் இணைந்து தென்னாப்பிரிக்காவின் கருப்பின முதல் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார். நெல்சன் மண்டேலா பிறந்தபோது தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் அதன் உச்சத்தில் இருந்தது. தொன்று தொட்டு கருப்பர்கள்தான் தென்னாப்பிரிக்கா மண்ணுக்கு சொந்தக்காரர்கள்.
பதினேழாம் நூற்றாண்டில் அங்கு வந்து குடியேறிய பிரெஞ்சு டச்சு நாட்டவர்களையும், ஆங்கிலேயர்களையும் வரவேற்றது தென்னாப்பிரிக்க மண். எண்ணிக்கை பெருக பெருக அதிகாரத்தைக் கைப்பற்றி கருப்பினத்தவர்களை கொத்தடிமைகளாக நடத்த எத்தனித்தனர் விருந்தினர்களாக வந்த வெள்ளையர்கள். தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் என்பது விழுக்காட்டினராக இருந்த கருப்பர்களுக்கு வெள்ளையர்கள் ஒதுக்கிக் கொடுத்த நிலப்பரப்பு எவ்வுளவு தெரியுமா? வெறும் பதின்மூன்று விழுக்காடுதான். வெள்ளையர்களுக்கென்று தனி பள்ளிக்கூடங்கள், நூலகங்கள், மருத்துவமணைகள், பூங்காக்கள், கட்டடங்கள். அங்கே கருப்பர்களுக்கு அனுமதி கிடையாது. வெள்ளையர்கள் வாழும் பகுதியில் நடப்பதற்குகூட கருப்பினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து என்பது விழுக்காட்டினர் மக்களால் போராடியிருக்க முடியாதா? என்று நீங்கள் கேட்கலாம். வெள்ளையர்கள் புத்திசாலிகள் அவர்கள் மொழிகளின் பெயரால் கருப்பர்களை பிரித்து வைத்திருந்தனர். ஆனால் வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வந்தது ANC எனப்படும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ். அப்போது கல்லூரி மாணவராக இருந்த நெல்சன் மண்டேலா காங்கிரசின் இளையர் பிரிவைத் தொடங்கினார். மண்டேலாவின் வருகைக்குப்பிறகு இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1960-ஆம் ஆண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கருப்பினத்தவரின் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். இருபதாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கொதித்தெழுந்த மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவே ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை தடை செய்தது தென்னாப்பிரிக்க அரசு.
இனி அகிம்சை வழி பலன் தராது என்று நம்பிய மண்டேலாவும், அவரது நண்பர்களும் ஆயுதம் ஏந்த முடிவெடுத்து ரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினர். 1962-ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவரை கைது செய்தது தென்னாப்பிரிக்க அரசு. ஆவணங்கள் இன்றி நாட்டை விட்டு வெளியேறினார் என்றும், அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்றும் கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஒரு தீவுச்சிறையில் அடைத்தது தென்னாப்பிரிக்க அரசு அந்த ஆண்டு 1964. அடுத்த 27-ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார் மண்டேலா. இனி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால் விடுதலை செய்வதாக 1973-ஆம் ஆண்டு மற்றும் 1983-ஆம் ஆண்டிலும் தென்னாப்பிரிக்க அதிபர் கேட்டுக்கொண்டும் அதனை ஏற்க மறுத்து விட்டார் மண்டேலா. அவரது மன உறுதி கருப்பினத்தவர்களை ஒன்றுபட ஊக்கமூட்டியது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன.
மண்டேலாவை விடுவிக்க கோரி உலக நாடுகளும் தென்னாப்பிரிக்காவை நெருக்கத் தொடங்கின பணிய மறுக்கவே தென்னாப்பிரிக்காவின் மீது கடுமையான பொருளியல் தடைகளை விதித்தன உலக நாடுகள். உலகமே போர்க்கொடி தூக்கிய பிறகு தமது அட்டுழியங்களை உணர்ந்தது வெள்ளையின சமூகம். 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் அப்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் F.W.de Klerk நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்தார். புன்னகையோடு வெளி வந்த அவரை உலகம் அதிசயமாக பார்த்தது. தமது வாழ்க்கையின் கால் நூற்றாண்டை நான்கு சுவருக்குள் கழித்த அவரிடம் எந்தவித காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்புணர்ச்சியோ அறவே இல்லை. அவரது விடுதலைக்குப் பிறகு இன ஒதுக்கல் சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
1994-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபரானார் நெல்சன் மண்டேலா. அவ்வுளவு கொடுமைகளுக்குப்பிறகு அதிபரான அவர் என்ன சொன்னார் தெரியுமா? தமது மக்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்......
'நம்மை ஒடுக்கியவர்களைப் பார்த்து நாமெல்லாம் தென்னாப்பிரிக்கர்கள் பழைய ரணங்களை மறந்து ஒன்றாக இணைந்து புதிய தென்னாப்பிரிக்காவை உருவாக்குவோம், எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நட்பு கரத்தை நீட்டுகிறேன் இந்த நாட்டை மறுநிர்மாணம் செய்ய உதவுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்'.
இப்படிப்பட்ட உன்னத தலைவர் வாழும் காலத்திலேயே வாழ நாமெல்லாம் பேறு பெற்றவர்கள். தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் என்ற அரக்கன் ஒழிய பாடுபட்ட அவருக்கும், அதிபர் F. W. de Klerk அவர்களுக்கும் 1993-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு அவராகவே அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பல்லாண்டுகள் தனது மக்கள் பட்ட கொடுமைகளையும், 27-ஆண்டுகள் தாம் அனுபவித்த வேதனைகளையும் நினைத்து அதிகாரம் தன் கையில் வந்தவுடன் நெல்சன் மண்டேலா வெள்ளையினத்தவரை பழி வாங்க புறப்பட்டிருந்தாலும் நாம் அதற்கு நியாயம் கற்பித்திருக்கலாம். சராசரி மனிதர்களின் இயல்பு அது. ஆனால் சராசரி மனிதனிலிருந்து அவர் உயர்ந்து நிற்கிறார் அதற்கு காரணம் இந்த பாடல் வரிகள்....
"மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா....
இதை மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா"....
நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை நமக்கு பல பாடங்களை தந்தாலும் ஒரு பாடம் உயர்ந்து நிற்கிறது. அதுதான் மன்னிப்பு எனும் பாடம். தவறு செய்யும்போது மன்னிப்பு கேட்போருக்கும், தவறு செய்தவர்களை மன்னிக்கத் தெரிந்தோருக்கும் நிச்சயம் எந்த வானமும் வசப்படும்.

Wednesday, July 6, 2016

குருப்பெயர்ச்சி 2016 - 2017 பலன்கள் எளிய பரிகாரங்களுடன்!

பிரகஸ்பதி என்று பிரபஞ்சமே போற்றித் துதிக்கும் குருபகவான்தான் ஞானத்தின் பிதாமகனாய்த் திகழ்கிறார்.கல்வி அறிவு, அனுபவ அறிவு, பகுத்தறிவு என்று அனைத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் குருபகவான். காலசர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற சகல தோஷங்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டவர். களங்கம் இல்லாத மனம், நீங்காத செல்வம், மாசற்ற வாழ்க்கை போன்ற அனைத்துக்கும் சொந்தக்காரர் குருபகவான். பொறுமை, நன்றி மறவாமை, பிறர் சொத்துக்கு ஆசைப்படாமல் இருப்பது போன்ற நல்ல பண்புகளை நமக்கு அருள்பவர். குருவின் பார்வை பட்டால்தான் திருமணம் நடைபெறும். ஒருவரின் ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் எப்படி இருந்தாலும், குரு மட்டும் நல்ல நிலையில் இருந்தால் எதையும் சாதிக்கும் சக்தி கிடைக்கும்.

இந்த துர்முகி வருடம் ஆடி மாதம் 18-ம் தேதி 2.8.16 செவ்வாய்க்கிழமை கிருஷ்ண பட்சத்து அமாவாசை திதி மேல்நோக்குள்ள பூசம் நட்சத்திரம், ஸித்தி நாமயோகம், சதுஷ்பாத நாமகரணம், நேத்திரம், ஜீவனம் மறைந்த சித்தயோகத்தில், புதன் ஹோரையில், இரண்டாம் ஜாமத்தில், பஞ்ச பட்சியில் ஆந்தை துயில் கொள்ளும் நேரத்தில், தட்சிணாயன புண்ணிய கால கிரீஷ்ம ருதுவில் காலை மணி 9.24-க்கு கன்யா லக்னத்தில் பிரகஸ்பதி  எனும் தேவ குருவாகிய வியாழபகவான் சிம்ம ராசியிலிருந்து உபய வீடான கன்னி ராசிக்குள் சென்று அமர்கிறார். 1.9.17 வரை கன்னி ராசியில் அமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார்.
 
கடந்த ஓராண்டு காலமாக சிம்ம ராசியில் அமர்ந்து  அரசியலில் பல விளையாட்டுகளை விளையாடினார். தங்கத்தின் விலையிலும் ஏற்ற இறக்கங்களை அடிக்கடி ஏற்படுத்தினார். 



2.8.16 முதல் 1.9.17 வரை உள்ள கால கட்டத்தில் வித்யாகாரகன் புதன் வீடான கன்னியில் அமர்வதால், இப்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்கள் இனி மாறும். மாணவர்கள் மனப்பாடம் செய்து வினாக்களுக்கு விடையளிக்கும் போக்கு மாறும். சொந்தமாக யோசித்து விடை எழுதும் முறை நடைமுறைக்கு வரும். இன்ஜினீயரிங், மருத்துவப் படிப்புக்கான பாடங்கள் நவீனமாகும். புகழ் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்கள் பாதிப்புக்குள்ளாகும். மறந்து போன நம்நாட்டு அறிஞர்களின் படைப்புகள், கண்டுபிடிப்புகளுடன் அயல்நாட்டு அறிஞர்களின் கருத்துக்களும் பாடத்தில் இனி இடம் பெறும். மாணவர்களின் புத்தகச் சுமை குறையும். வேலையில்லாமல் இருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு உள்நாட்டிலேயே வேலை கிடைப்பதற்கு புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.





மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலியல் சார்ந்த விழிப்பு உணர்வுகள் அதிகமாகும். சாஃப்ட்வேர் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் நம் நாட்டவரால் உலகுக்கு அறிமுகமாகும். அதிநவீன தொழில்நுட்பம் கொண்டதும் அளவில் சிறியதுமான கைப்பேசி, மடிக்கணினி மற்றும் கணினி வகைகள் சந்தையில் வெளியாகும். தகவல் தொழில்நுட்பத்துறை அசுரவளர்ச்சி அடையும். புதிதாக வானொலி, தொலைக்காட்சி மற்றும் நாள், வார, மாதப் பத்திரிகைகள் வெளியாகும். வைணவ ஸ்தலங்கள் வளர்ச்சியடையும். 

குருபகவான் ஐந்தாம் பார்வையால் சனிவீடான மகர ராசியைப் பார்ப்பதால், வாகன உற்பத்தி அதிகரிக்கும். சுயதொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை உயரும் ஆனால், புகழ் பெற்ற பாரம்பரியமான குடும்பத்தின் வழிவந்த தொழிலதிபர்கள் பாதிப்படைவார்கள். அன்னிய முதலீடுகள் அதிகமாகும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பெரிய பதவியில் அமர்வார்கள். எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகமாகும். புதிய கனிம, கரிம வளங்கள் கண்டறியப்படும். வாஷிங் மிஷின், ஏ.சி. மிஷின் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மழை மற்றும் இயற்கை வளங்களை கண்டறியக்கூடிய செயற்கைக் கோள்களை நம் நாட்டு அறிவியல் அறிஞர்கள் விண்ணில் செலுத்துவர். மலை, காடு செழிக்கும். வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும். 

குருபகவான் ஏழாம் பார்வையால் தன் வீடான மீன ராசியைப் பார்ப்பதால், கப்பல் போக்குவரத்துத் துறை வளர்ச்சியடையும். பழைய துறைமுகங்கள் புதுப்பிக்கப்படும். புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் சம்பளம் உயரும். ஆனால், அவர்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும் நடைமுறைக்கு வரும். மத்திய அரசு ஊழியர்கள் புதிய சலுகைகளைப் பெறுவர். பவழப் பாறை மற்றும் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க உலகளாவிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். தரமான குடிநீர், தடையில்லா மின்சாரம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும். கிராமங்கள் வளர்ச்சியடையும். விவசாயிகளைப் பாதுகாக்கவும், மகசூலை அதிகப்படுத்தவும் மத்திய அரசு  புதிய சலுகைகளை அறிவிக்கும். பருவ  மழை தவறாது பொழியும்.  

குருபகவான் ஒன்பதாம் பார்வையால் ரிஷப ராசியைப் பார்ப்பதால், சொந்த வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். முகம், கண் சார்ந்த நோய்களுக்கு நவீன மருந்துகள் கண்டறியப்படும். கட்டுமானத்துறையை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். ரியல் எஸ்டேட் 19.9.16-க்குப் பின் ஓரளவு சூடு பிடிக்கும். அதிநவீன குடியிருப்புகள் மற்றும் வர்த்தக மையங்கள் அதிகம் உருவாகும். ஆட்சியில் இருப்பவர்களுக்கும் நீதிபதிகளுக்கும் இடையில் கருத்து மோதல்களும், பனிப்போரும் அதிகரிக்கும். இளைஞர்கள் மத்தியில் அயல்நாட்டு மோகம் குறையும். அரசியலில் இளைஞர்களின் ஆதிக்கம் கூடும். 

குருபகவானின் நட்சத்திர பயணம்

2.8.16 முதல் 18.8.16 வரை உத்திரம் 2-ல்
19.8.16 முதல் 4.9.16 வரை உத்திரம் 3-ல்
5.9.16 முதல் 19.9.16 வரை உத்திரம் 4-ல் 
20.9.16 முதல் 5.10.16 வரை அஸ்தம் 1-ல்
6.10.16 முதல் 21.10.16 வரை அஸ்தம் 2-ல்
22.10.16 முதல் 7.11.16 வரை அஸ்தம் 3-ல்
8.11.16 முதல் 24.11.16 வரை அஸ்தம் 4-ல் 
25.11.16 முதல் 16.12.16 வரை சித்திரை 1-ல்
17.12.16 முதல் 16.1.17 வரை சித்திரை 2-ல் 
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை 3-ல் துலாம்
22.2.17 முதல் 7.4.17 வரை சித்திரை 2-ல் (வக்ரம்)
8.4.17 முதல் 2.5.17 வரை சித்திரை 1-ல் (வக்ரம்)
3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் 4-ல் (வக்ரம்)
28.6.17 முதல் 14.7.17 வரை அஸ்தம் 4-ல் 
15.7.17 முதல் 10.8.17 வரை சித்திரை 1-ல்
11.8.17 முதல் 1.9.17 வரை சித்திரை 2-ல் 
(வக்ர காலம் 22.2.17 முதல் 27.6.17 வரை) 

இந்த குருமாற்றம் மக்களிடையே பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தையும், சுயதொழில் தொடங்கும் முனைப்பையும் தரும். முன்னெச்சரிக்கை உணர்வையும், தெய்வபக்தியையும் அதிகப் படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: கல்வி, கேள்விகளுக்கும், வர்த்தகத்துக் கும் உரிய கிரகமான புதனின் வீட்டில் குரு அமர்வதால், பழைய கல்வி நிறுவனங்களை புதுப்பிக்க உதவுங்கள். பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். திருக்குறள் உள்ளிட்ட நீதிநெறி நூல்களைப் படிப்பதுடன் அவற்றை பரிசுப் பொருளாகவும் மற்றவர்களுக்கு வழங்குங்கள். கன்னியில் அமர்ந்திருக்கும் குருவின் கருணை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.



மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலியல் சார்ந்த விழிப்பு உணர்வுகள் அதிகமாகும். சாஃப்ட்வேர் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் நம் நாட்டவரால் உலகுக்கு அறிமுகமாகும். அதிநவீன தொழில்நுட்பம் கொண்டதும் அளவில் சிறியதுமான கைப்பேசி, மடிக்கணினி மற்றும் கணினி வகைகள் சந்தையில் வெளியாகும். தகவல் தொழில்நுட்பத்துறை அசுரவளர்ச்சி அடையும். புதிதாக வானொலி, தொலைக்காட்சி மற்றும் நாள், வார, மாதப் பத்திரிகைகள் வெளியாகும். வைணவ ஸ்தலங்கள் வளர்ச்சியடையும். 

குருபகவான் ஐந்தாம் பார்வையால் சனிவீடான மகர ராசியைப் பார்ப்பதால், வாகன உற்பத்தி அதிகரிக்கும். சுயதொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை உயரும் ஆனால், புகழ் பெற்ற பாரம்பரியமான குடும்பத்தின் வழிவந்த தொழிலதிபர்கள் பாதிப்படைவார்கள். அன்னிய முதலீடுகள் அதிகமாகும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பெரிய பதவியில் அமர்வார்கள். எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகமாகும். புதிய கனிம, கரிம வளங்கள் கண்டறியப்படும். வாஷிங் மிஷின், ஏ.சி. மிஷின் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மழை மற்றும் இயற்கை வளங்களை கண்டறியக்கூடிய செயற்கைக் கோள்களை நம் நாட்டு அறிவியல் அறிஞர்கள் விண்ணில் செலுத்துவர். மலை, காடு செழிக்கும். வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும். 

குருபகவான் ஏழாம் பார்வையால் தன் வீடான மீன ராசியைப் பார்ப்பதால், கப்பல் போக்குவரத்துத் துறை வளர்ச்சியடையும். பழைய துறைமுகங்கள் புதுப்பிக்கப்படும். புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் சம்பளம் உயரும். ஆனால், அவர்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும் நடைமுறைக்கு வரும். மத்திய அரசு ஊழியர்கள் புதிய சலுகைகளைப் பெறுவர். பவழப் பாறை மற்றும் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க உலகளாவிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். தரமான குடிநீர், தடையில்லா மின்சாரம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும். கிராமங்கள் வளர்ச்சியடையும். விவசாயிகளைப் பாதுகாக்கவும், மகசூலை அதிகப்படுத்தவும் மத்திய அரசு  புதிய சலுகைகளை அறிவிக்கும். பருவ  மழை தவறாது பொழியும்.  

குருபகவான் ஒன்பதாம் பார்வையால் ரிஷப ராசியைப் பார்ப்பதால், சொந்த வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். முகம், கண் சார்ந்த நோய்களுக்கு நவீன மருந்துகள் கண்டறியப்படும். கட்டுமானத்துறையை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். ரியல் எஸ்டேட் 19.9.16-க்குப் பின் ஓரளவு சூடு பிடிக்கும். அதிநவீன குடியிருப்புகள் மற்றும் வர்த்தக மையங்கள் அதிகம் உருவாகும். ஆட்சியில் இருப்பவர்களுக்கும் நீதிபதிகளுக்கும் இடையில் கருத்து மோதல்களும், பனிப்போரும் அதிகரிக்கும். இளைஞர்கள் மத்தியில் அயல்நாட்டு மோகம் குறையும். அரசியலில் இளைஞர்களின் ஆதிக்கம் கூடும். 

குருபகவானின் நட்சத்திர பயணம்

2.8.16 முதல் 18.8.16 வரை உத்திரம் 2-ல்
19.8.16 முதல் 4.9.16 வரை உத்திரம் 3-ல்
5.9.16 முதல் 19.9.16 வரை உத்திரம் 4-ல் 
20.9.16 முதல் 5.10.16 வரை அஸ்தம் 1-ல்
6.10.16 முதல் 21.10.16 வரை அஸ்தம் 2-ல்
22.10.16 முதல் 7.11.16 வரை அஸ்தம் 3-ல்
8.11.16 முதல் 24.11.16 வரை அஸ்தம் 4-ல் 
25.11.16 முதல் 16.12.16 வரை சித்திரை 1-ல்
17.12.16 முதல் 16.1.17 வரை சித்திரை 2-ல் 
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை 3-ல் துலாம்
22.2.17 முதல் 7.4.17 வரை சித்திரை 2-ல் (வக்ரம்)
8.4.17 முதல் 2.5.17 வரை சித்திரை 1-ல் (வக்ரம்)
3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் 4-ல் (வக்ரம்)
28.6.17 முதல் 14.7.17 வரை அஸ்தம் 4-ல் 
15.7.17 முதல் 10.8.17 வரை சித்திரை 1-ல்
11.8.17 முதல் 1.9.17 வரை சித்திரை 2-ல் 
(வக்ர காலம் 22.2.17 முதல் 27.6.17 வரை) 

இந்த குருமாற்றம் மக்களிடையே பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தையும், சுயதொழில் தொடங்கும் முனைப்பையும் தரும். முன்னெச்சரிக்கை உணர்வையும், தெய்வபக்தியையும் அதிகப் படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: கல்வி, கேள்விகளுக்கும், வர்த்தகத்துக் கும் உரிய கிரகமான புதனின் வீட்டில் குரு அமர்வதால், பழைய கல்வி நிறுவனங்களை புதுப்பிக்க உதவுங்கள். பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். திருக்குறள் உள்ளிட்ட நீதிநெறி நூல்களைப் படிப்பதுடன் அவற்றை பரிசுப் பொருளாகவும் மற்றவர்களுக்கு வழங்குங்கள். கன்னியில் அமர்ந்திருக்கும் குருவின் கருணை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

தையும் உடனே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களே! 

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து சுப பலன்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 6-வது வீட்டுக்குள் பிரவேசிக்கிறார். சின்னச் சின்ன இழப்புகளும், ஏமாற்றங் களும் இருக்கும் என்றாலும் அதற்காக அஞ்ச வேண்டாம்.

எந்த ஒரு காரியத்தையும் நன்கு யோசித்துச் செய்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம். கணவன் - மனைவிக்குள் சிலர் வீண் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்குகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அவ்வப் போது கடன்சுமை கலக்கம் தரலாம்.
குரு தனது 9-ம் பார்வையால் உங்க ளின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டைப் பார்ப்பதால், குடும்பத்தில் அமைதி உண்டாகும். தேங்கிக் கிடந்த வழக்கில் வெற்றியுண்டு. ஆரோக்கியம் சீராகும்.  குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர் கள். வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். வேலை கிடைக்கும். வேற்று மாநிலத் தவர்களால் அனுகூலம் உண்டாகும். 

குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும்.  புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

2.8.16 முதல் 19.9.16 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால், குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு வந்து சேரும். 

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் சுகாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திரத்தில் குரு செல்வதால், வசதியுள்ள வீட்டுக்கு குடி புகுவீர்கள். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். 

25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிநாதனும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குரு செல்வதால், உடன்பிறந்தவர்கள் உங்க ளைப் புரிந்துகொள்வர். வீடு, மனை வாங்கு வது, விற்பது லாபகரமாக முடியும். ஆனால், அலைச்சலும் செலவினங்களும்  தொடரும்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் சென்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கள் வரும். திருமணம் கூடி வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்த நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், சகோதர வகையில் மனவருத்தம், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து செல்லும். தன்னம் பிக்கை குறையும். எனினும், முன்னேற்றம் தடைப்படாது. 

வியாபாரத்தில், ஏற்ற-இறக்கங்கள் இருக்கவே செய்யும். ஆகவே, சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்யுங்கள். பழைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளுங்கள். கமிஷன், உணவு, மருந்து, கன்சல்டன்சி ஆகிய வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.    
  
உத்தியோகத்தில் உங்களின் நிலையை தக்கவைத்துக் கொள்ள போராட வேண்டியது இருக்கும். உங்கள் உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும். நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

மாணவ-மாணவிகளே! தொடக்கத்தில் இருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கட்டுரை, பேச்சு, இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற வாய்ப்பு உண்டு. நீங்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் போராடி இடம்பிடிப்பீர்கள்.

கலைத் துறையினருக்கு, மூத்த கலைஞர் களின் ஆதரவு கிடைக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் உழைப்புக்கு சிலர் உரிமை கொண்டாட வாய்ப்பு உண்டு. எனவே கவனம் தேவை.  

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களது எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி, அவ்வப்போது உங்களை ஏமாற்றும். எனினும்,  உங்களின் சகிப்புத் தன்மையாலும் விட்டுக் கொடுத்துப் போகும் குணத்தாலும் ஓரளவு மகிழ்ச்சியை தருவதாக அமையும்.
பரிகாரம்: 

வேலூர் மாவட்டம் சோளிங்கர் எனும் ஊரில் அருள் பாலிக்கும் ஸ்ரீயோக நரசிம்மரை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். நல்லது நடக்கும்.

எந்தச் சூழலிலும் மற்றவர்களின் தயவில் வாழ விரும்பாதவர்களே!

இதுவரை உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் அமர்ந்து, உங்களைப் பல வகைகளிலும் சிரமப் படுத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர் கிறார். உங்களுடைய அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். எதிலும் வெற்றி உண்டாகும். கடன் தொல்லைகள் குறை யும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்னியம் உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். சிலருக்குக் குழந்தை பாக்கி யம் உண்டாகும். மகனின் கல்வி, வேலை தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். 

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொலிவு கூடும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வேலைக்குக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும்.
  
குரு தனது 5-ம் பார்வையால் உங்க ளின் 9-ம் வீட்டை பார்ப்பதால், மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். தந்தையின் உடல்நிலை சீராகும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. 
உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால், தொட்டது துலங்கும். மூத்த சகோதர வகை யில் உதவிகள் உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புதுப் பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் சுகாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில், 2.8.16 முதல் 19.9.16 வரை குரு பயணிப்பதால், தள்ளிப்போன வேலைகள் முடியும். பெற்றோரின் ஆரோக்கியம் சீராகும். அரசால் அனுகூலம் உண்டு. 

20.9.16 முதல் 24.11.16 வரை மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் சேவகாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத் திரத்தில் குரு செல்வதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். நவீனரக வாகனம் மற்றும் கைப்பேசி வாங்குவீர்கள். 

உங்கள் சப்தம - விரயாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம்- கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 வரை மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குரு செல்வதால், தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகமாகும். திடீர் பயணங்களால் செலவுகள் இருக்கும். கடந்த கால கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது டென்ஷனாவீர்கள்.  
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 6-ம் வீட்டில் குரு மறைவதால், குடும்பத்தில் சிறு குழப்பங்கள் வரக்கூடும். சிறு சிறு விபத்து களும் ஏறப்டலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். முன்கோபத்தைத் தவிர்க்கவும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும், 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்த நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், சுபச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். மாற்று மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். 

வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பற்று வரவு உயரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்கு பண உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் உங்களின் புதிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். கடையை பிரதானமான இடத் துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாவர். ரியல் எஸ்டேட், மூலிகை, ஏற்று மதி - இறக்குமதி, ஜுவல்லரி வகைகளால் லாபம் வரும்.
உத்தியோகத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத் துவம் தருவார்கள்; உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். வேலைச்சுமை குறையும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். 

மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் பிறக்கும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். 

கலைத் துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுடைய கலைத் திறன் வளரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களுக்கு மன ஆறுதல் தருவதுடன், புகழ், கௌரவத்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்:     

திருவிடைமருதூரில் அருள் பாலிக்கும் ஸ்ரீபெருமுலையாள் உடனுறை ஸ்ரீமகாலிங்க சுவாமியை பிரதோஷ நாளில் இளநீர் கொடுத்து வணங்குங்கள். வெற்றி கிட்டும்.

யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படும் அன்பர்களே!

இதுவரை உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை முடக்கி வைத்திருந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 4-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பிரச்னை களை அறிவுபூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் அணுகுங்கள். 

சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை அறிவதில் குழப்பம் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். 
உத்தியோகத்தின் பொருட்டோ, வீண் சந்தேகத்தாலோ தம்பதிக்கு இடையே பிரிவுகள் ஏற்படலாம். சோர்வு, கை- கால் வலி வந்து விலகும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். 

உங்களின் உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால், புது வேலைக்கு முயற்சித்தவர் களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். 

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்ப தால் சுபச் செலவுகள் அதிகமாகும். வெளித் தொடர்புகள் விரிவடையும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் தைரிய ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் - கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால் தைரியம் பிறக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும்.  

20.9.16 முதல் 24.11.16 வரை மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் தனாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திரத்தில் குரு செல்வதால், சாமர்த்திய பேச்சால் சாதிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் கூடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். 

உங்கள் சஷ்டம - லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 வரை மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குரு செல்வதால், உடன்பிறந்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். 

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 5-ம் வீட்டில் குரு அமர்வதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். உறவினர்கள் மதிப்பார்கள்.  

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும், 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும். நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஆற்றலும் உங்களுக்குக் கிடைக்கும். இருமல், முதுகுத் தண்டில் வலி வந்து போகும். நல்ல வர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். 
 
வியாபாரத்தில் சிறு சிறு நஷ்டங்கள் உண்டு. தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். கூட்டுத் தொழிலை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த ஆர்டர் தாமதமாக வரும். கட்டட உதிரி பாகங்கள், கமிஷன், காய்கறி வகை களால் லாபமடைவீர்கள். 

உத்தியோகத்தில் மேலதிகாரியைக் கணிக்க முடியாது. எனினும், கவலைகளை மறைத்துக்கொண்டு கடினமான உழைப்பைத் தொடர்வீர்கள். உங்களுக்கு நேர் மூத்த அதிகாரியை விடவும், மேல்மட்ட அதிகாரி ஆதரவாக இருப்பார். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வரும். அடிக்கடி விடுப்பில் செல்ல வேண்டாம். 

மாணவ-மாணவிகளே! தேர்வுகளில் போராடி வெற்றி பெறவேண்டிய நிலை என்பதால், பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிக்கவும். சிலருக்கு பள்ளி அல்லது கல்லூரி மாறவேண்டி இருக்கும்.
கலைத்துறையினருக்கு, வீண் வதந்தி களால் புகழ் குறையும். கிடைக்கும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும். 
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சிறு சிறு தடங்கல்களையும் இடமாற்றத்தையும் அவ்வப்போது தந்து உங்களை அலைக்கழித் தாலும், தொடர் முயற்சியால் இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்:

நாச்சியார்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீவஞ்சுளவல்லி உடனுறை ஸ்ரீதிருநறையூர் நம்பி மற்றும் கருடாழ்வாரை ஏதேனும் ஒரு வியாழக்கிழமையில் துளசி மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். மனஅமைதி கிட்டும்.

உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்களே! 

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பலன்களை அருளிய குருபகவான், இப்போது 3-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் சஷ்டம-பாக்கிய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால், உங்களின் அணுகு முறையை மாற்றிக்கொள்வது நல்லது. 

வேலைகளை முடிப்பதில் இழுபறி நீடிக்கும். தன்னம்பிக்கை குறையும்.கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது. இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். 

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்ப தால், உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். புது வேலை அமையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.

குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். 

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால், உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறை வேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் தனாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில், 2.8.16 முதல் 19.9.16 வரை குரு பயணிப்பதால், உங்களின் மதிப்பு கூடும். திடீர் பணவரவு உண்டு. அரசு காரியங்கள் உடனே முடியும். அதிகாரப் பதவியில் இருப் பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.  

20.9.16 முதல் 24.11.16 வரை மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரையிலும், உங்கள் ராசிநாதனான சந்திரனின் அஸ்த நட்சத் திரத்தில் குருபகவான் செல்வதால், வருமானம் உயரும்.

 ஆரோக்கியம் கூடும். உறவினர்களின் வருகையால் வீடு களை கட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 
    
உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 வரை மற்றும் 15.7.17 முதல் 1.09.17 வரை குருபகவான் செல்வதால், நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். உங்களின் புகழ் உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 4-ம் வீட்டில் குரு நுழைவதால், சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.    
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும், 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்த நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். பணப் பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். 

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டு.சிலர், கடன் வாங்கி கடையை விரிவுபடுத்து வீர்கள். சிலர், கூட்டுத் தொழிலில் நம்பிக்கை யான பங்குதாரரை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஸ்டேஷனரி, போர்டிங் லாட்ஜிங், பெட்ரோ கெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். 
    
உத்தியோகத்தில் பணிகளைக் கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கூடும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாகத் தரும் வேலைகளை சலித்துக்கொள்ளாமல் செய்வது நல்லது. அடிக்கடி இடமாற்றம் வரும்.

மாணவ-மாணவிகளே! சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களைக் கேளுங்கள். கணக்கு, வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கலைத் துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். யதார்த்தமான படைப்பு களைத் தருவதற்கு முயற்சியுங்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அவ்வப்போது உங்களை பலவீனமாக உணர வைக்கும். எனினும், முன்னெச்சரிக்கை உணர்வாலும், யதார்த்தமான பேச்சாலும் ஒரளவு முன்னேற்றத்தைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்:

கோயம்புத்தூர் மாவட்டம் ஆவாரம்பாளையம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீபண்ணாரி அம்மனை ஏதேனும் ஒரு திங்கள் கிழமையில் எலுமிச்சம் பழம் மாலை அணிவித்து வணங்குங்கள். முயற்சி திருவினையாக்கும்.

காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்தும் அன்பர்களே!

இதுவரை ஜன்ம குருவாக அமர்ந்து, பல வகைகளிலும் இன்னல்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 2-ம் வீட்டில் அமர்வதால், புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நிறைவேறும்.  

பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் வலிய வந்து மன்னிப்பு கேட்பார்கள். ஷேர் மூலமாக பணம் வரும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வழக்கு சாதகமாகும்.

குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். அதிக சம்பளத்துடன் அயல்நாடு தொடர்பு டைய நிறுவனத்தில் வேலை அமையும்.  

குரு பகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால், பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாற்று மொழியினரால் நன்மை உண்டு. 

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், வேலைச்சுமை குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சொந்தமாக சிலர் தொழில் தொடங்குவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். 

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

2.8.16 முதல் 19.9.16 வரை உங்கள் ராசியாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். அரசாங்க கெடுபிடிகள் விலகும். வீடு- மனை வாங்குவீர்கள். நோய் விலகும்.  

20.9.16 முதல் 24.11.16 வரை மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் விரய ஸ்தானாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திரத்தில் குரு செல்வதால், தூக்கம் கெடும். வீண் சந்தேகம் வேண்டாம். செலவுகளும், தர்ம சங்கடமான சூழ்நிலையும் அதிகரிக்கும். 

25.11.16 முதல் 16.1.17 வரை மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குரு செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 3-ம் இடத்தில் குரு மறைவதால், புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். இளைய சகோதர வகையில் மனவருத்தம் வரும். வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்த நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், அநாவசியமாக எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். விமர்சனங் களைக் கண்டு அஞ்ச வேண்டாம். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். பாக்கிகள் வசூலாகும். சந்தை நிலவரத்தை துல்லியமாக அறிந்து செயல் படுவீர்கள். மக்களின் ரசனைக்கேற்ப புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். துரித உணவகம், ஆட்டோமொபைல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். 

உத்தியோகத்தில், உங்கள் கடின உழைப் புக்கு அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரி கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சில சிறப்புப் பொறுப்பு களை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். சம்பளம் உயரும். 

மாணவ-மாணவிகளே! சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். கடினமான பாடங்களில் கூட அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.   

கலைத் துறையினருக்கு பெரிய வாய்ப்பு கள் வரும். பிரபல கலைஞர்களால் பாராட் டப்படுவீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். 

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, ஒடுங்கியிருந்த உங்களை ஓங்கி வளர வைப்பதுடன், ஒரு சாதனையாளராக மாற்றிக் காட்டுவதாகவும் அமையும்.
பரிகாரம்:

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அருளும் ஸ்ரீசினேகவல்லி உடனுறை ஸ்ரீஆதிரத்தினேஸ்வரரை உத்திராடம் நட்சத்திரம் அல்லது ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வில்வ தளத்தால் அர்ச்சித்து வணங்கி வாருங்கள். கனவு நனவாகும்.

கலாரசனை உள்ளவர்களே! 

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இருந்து வீண் விரயங்களையும், பணப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி வந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்குள் அமர்கிறார். ஜன்ம குரு என்று கலக்கம் கொள்ள வேண்டாம். பொறுப்புக்கள் அதிகரிக்கத்தான் செய்யும். ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்யவேண்டி இருக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரக்கூடும். ராசியிலேயே குரு அமர்வதால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பணம் எவ்வளவுதான் வந்தாலும் எடுத்து வைக்கமுடியாதபடி செலவுகள் துரத்தும். அவ்வப்போது அவநம்பிக்கை வந்து நீங்கும். 

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால். தெளிவாக முடிவு எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். 

குரு பகவான் 7-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மனக் கசப்புகள் ஏற்பட்டாலும் அன்பு குறையாது. வழக்குகளில் இருந்த நெருக்கடி நீங்கும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் பாக்ய வீடான 9-ம் வீட்டைப் பார்ப்பதால், அரைகுறையாக நின்ற வேலைகள் நல்லபடி முடியும். பணப் புழக்கம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். 

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் விரயாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். உத்திர நட்சத்திரத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு உடல் உஷ்ணம், தோலில் நமைச்சல், முன்கோபம் வந்து செல்லும்.

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், நினைத்த காரியங்கள் நல்லபடி முடியும். திடீர் பணவரவுக்கு இடமுண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். அஸ்தம் நட்சத்திர அன்பர்களுக்கு காய்ச்சல், தலைவலி வந்து போகும். அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம்.

உங்கள் ராசிக்கு 3-க்கும் 8-க்கும் உடைய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு பசியின்மை, வயிற்று வலி வந்து போகும். சொத்து வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியான 2-ம் வீட்டில் குரு அமர்வதால், ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், எதிலும் அவசரப்பட வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். 

வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, பதிப்பகம், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். 

உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போகக் கற்றுக் கொள்ளுங்கள். சந்தர்ப்பம் பார்த்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துக் களை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. நீங்கள் செய்து முடித்த வேலைக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். அவ்வப்போது மறைமுக எதிர்ப்புகளையும், இடமாற்றங்களையும் சந்திக்க வேண்டி வரும்.    
                
மாணவ-மாணவிகளே! படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டியது அவசியம். உங்களுடைய தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். 
 
கலைத்துறையினரே! உங்களின் படைப்பு களை ரகசியமாக வைத்திருங்கள். சிலர் உங் கள் மீது வழக்கு தொடுக்க வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்கள் உடலையும் மனதையும் உரப் படுத்துவதுடன், தன் கையே தனக்கு உதவி என்பதை உணரவைப்பதாக அமையும்.
பரிகாரம்: 

தஞ்சை மாவட்டம், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஏலவார்குழலி சமேத ஸ்ரீஆபத்சகாயேஸ் வரரையும், குருபகவானையும் பௌர்ணமி திதி நாளில் பஞ்சாமிர்தம் தந்து வணங்கி வாருங்கள்.

நடுநிலைமை தவறாதவர்களே! 

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்துகொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றிய துடன், பதவி, அந்தஸ்தையும் தந்த குரு பகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை விரயஸ்தானமான 12-ம் இடத்துக்கு வருகிறார். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். 

மனக் குழப்பம் அதிகரிக்கும். பழைய கடன்களை நினைத்துக் கலக்கம் உண் டாகும். வருமானத்தை உயர்த்த கூடுதலாக உழைப்பீர்கள். வீண் கவலைகள் மனதை வாட்டும். வழக்குகளில் எச்சரிக்கை தேவை. 

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் வேறு ஊருக்கு இடம் மாறுவீர்கள். 

குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்ப தால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். புது வேலை கிடைக்கும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களிடம் உண்மையான அன்பும் அக்கறையும் உள்ளவர்களைப் புரிந்து கொள்வீர்கள். வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் ஆதாயம் உண்டாகும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் பாதகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். 

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்களின் ஜீவனாதி பதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். மகளுக்கு திருமணம் முடியும். 

உங்கள் தனாதிபதியும் சப்தமாதிபதியு மான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், வருமானம் உயரும். குடும்பத்தில், கணவன்-மனைவிக் குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். 

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் உங்கள் ராசியில் குரு அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால், காய்ச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை போன்ற உடல் உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். வேலைச் சுமையால் அசதி உண்டாகும். 

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்பீர்கள். வங்கிக் கடன் பெற்று சிலர் புது முதலீடு செய்வீர்கள். கமிஷன், ஏஜென்சி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக் கும். எனினும், எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் எடுக்க அரும்பாடு படவேண்டும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. உங்களின் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள். சிலருக்கு பள்ளி மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். 

கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனம் தளராமல் செயல்படுங்கள்; சாதிக்கலாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங் களுக்கு புதிய படிப்பினைகளைத் தருவதுடன்,  வாழ்க்கையை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆதிநாத நாயகி உடனுறை ஸ்ரீஆதிநாதப் பெருமாளை ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.

கேள்விக் கணைகள் தொடுப்பதில் வல்லவர்களே! 

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு, உங்களைப் பலவகைகளிலும் அலைக்கழித்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், இனி முன்னேற்றம் உண்டாகும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். புகழும் செல்வாக்கும் கூடும். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளை களின் வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால், உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு, மனை வாங்குவது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

குரு பகவான் 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். மகளுக்கு வேலை கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்தி லிருந்து வாழ்க்கைத் துணை அமைவார். வழக்கில் வெற்றி கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடன் செலுத்துவீர்கள். 

குருபகவான் தனது 9-ம் பார்வையால் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். 

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். அரசாங்க விஷயங்கள் சுலபமாக முடியும். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். 

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் பாக்கியாதி பதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவு அதிகரிக்கும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும்.  நிரந்தர வருமானத்திற்கு வழி தேடுவீர்கள். 

உங்கள் ராசியாதிபதியும்-சஷ்டமாதி பதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், எதிர்ப்புகள் குறையும்.புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். கடனில் ஒரு பகுதி தீரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 12-ம் வீட்டில் குரு மறைவதால், எதிர்பாராத பயணங்கள் உண்டு. வீடு கட்டும் முயற்சியில் இறங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், மனக்குழப்பங் களும், தடுமாற்றங்களும் இருந்து கொண்டே யிருக்கும். ஆனால், பண வரவு குறையாது.  

வியாபாரத்தில் சந்தை நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். துரித உணவகம், இரும்பு, ரியல் எஸ்டேட், கடல் வாழ் உயிரினங்களால் லாபம் பெருகும். கடையை பிரபலமான இடத்துக்கு மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. தலைமைப் பொறுப்பு தேடி வரும்.  

மாணவ-மாணவிகளே! உங்களுடைய தனித் திறமைகளை அதிகரித்துக் கொள்வீர் கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள்.  

கலைத்துறையினரே! விருதுகள் கிடைக்கும். உங்களின் கற்பனைத் திறன் பெருகும். சக கலைஞர்களை மதிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி,  உங்களை தலை நிமிரச் செய்வதுடன், வசதி, வாய்ப்புகளைத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்:

மகாபலிபுரத்துக்கு அருகிலுள்ள திருப்போரூரில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப்பெருமானையும் சிதம்பர சக்கரத்தையும் ஏதேனும் ஒரு செவ்வாய் கிழமை அல்லது சஷ்டி திதி நாளில் சென்று தரிசியுங்கள். செல்வம் பெருகும்.

வளைந்து கொடுக்கத் தெரியாதவர்களே! 

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு புதிய அனுபவங்களைத் தந்து, உங்களை முன்னேற்றப் பாதையில் நடத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். பத்தில் குரு, பதவிக்கு ஆபத்து என்று அச்சம் கொள்ளவேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வேலைச் சுமை அதிகரிக்கும். உங்கள் உழைப்பையும் திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். சிலர் வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரியவேண்டி இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வி.ஐ.பி.களை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். புது வேலை அமையும். 
    
குருபகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வழக்கு சாதகமாகும். 

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், செயலில் வேகம் காட்டுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். 

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் பாக்கியாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு பெருகும். 

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் அட்டமாதி பதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அவ்வப்போது அடிவயிற்றில் வலி, ரத்த சோகை, கண் வலி வந்து போகும்.

உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும் விரயாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், மனோபலம் கூடும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணம் சிறப்பாக நடந்தேறும்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 11-ம் வீட்டில் குரு அமர்வதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டும் பணிக்கு, வங்கிக் கடன் கிடைக்கும்.       
                                
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.2017 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும், 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.

வியாபாரம் சுமாராக இருக்கும். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். வேலையாட்களால் விரயம் ஏற்படும். புது ஒப்பந்தங்கள் தாமதமாகும். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கெமிக்கல், எண்டர்பிரைசஸ், சிமென்ட் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள்.   

உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால், உத்தியோகத்தில் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும்.  அதிகாரிகள் கூடுதல் வேலை கொடுத்தாலும் சலிக்காமல் முடித்துத் தருவது நல்லது. 

மாணவ-மாணவிகளே! சாதிக்கவேண்டு மானால் ஊக்கத்துடன் படிக்கவேண்டும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் அவசியம். சிலரின் சிபாரிசு பெற்றே விரும்பிய பாடப்பிரிவில் சேர முடியும்.

கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளைக் கொடுங்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும். மூத்த கலைஞர்களின் நட்பால் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள். 
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, கடின உழைப்பாலும், தொலைநோக்குச் சிந்தனை யாலும் புதிய அனுபவப் பாடங்களை அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்: 

உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் எனும் ஊரில் அருளும் ஸ்ரீசிம்மகுரு தட்சிணா மூர்த்தியை வியாழக்கிழமை அல்லது தசமி திதியில் கொண்டைக் கடலை மாலை அணிவித்து வணங்குங்கள். தடைகள் விலகும்.

மனச்சாட்சிப்படி நடப்பவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து மனஇறுக்கத்தையும், வீண் அலைச்சல்களையும் கொடுத்து வந்த குருபகவான், இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால், புதிய பாதையில் பயணித்து சாதிப்பீர்கள். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். தன்னம்பிக்கை கூடும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். அறிஞர்களின் நட்பால் மனத் தெளிவு கிடைக்கும். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடையில் மரியாதை கூடும்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் ராசியைப் பார்ப்பதால், ஆரோக்கியம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் லாபம் தரும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர் கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 

குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியம் பிறக்கும். தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். வழக்கு சாதகமாகும். திருமணப் பேச்சு வார்த்தை நல்லபடி முடியும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பழைய கடன் பிரச்னை தீரும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சமையல றையை நவீனமாக்குவீர்கள். 

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். அலைச்சல் அதிகமாகும். சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். 
    
20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் சப்தமாதிபதி யான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்களுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். வீடு, வாகன வசதி பெருகும். 

உங்கள் சுகாதிபதியும் லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். தாயாரின் உடல்நலம் சீராகும். அவருடனான மன வருத்தங்கள் நீங்கும்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் 10-ம் வீட்டில் குரு அமர்வதால், வேலைச்சுமை அதிகமாகும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சின்னச் சின்ன அவமானம் ஏற்படக்கூடும். வீண் பழி ஏற்படும்.  

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், அடிக்கடி ஒரு தேக்க நிலை உண்டாகும். அவ்வப்போது இனம் தெரியாத கவலை வாட்டும். வயிறு தொடர்பான உபாதைகள் வந்து போகும்.

வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், லெதர், ஆடை வடிவமைப்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள்.    

உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.

மாணவ-மாணவிகளே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். கல்வியிலும், கலைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் கனவை நனவாக்குவீர்கள். 

கலைத்துறையினரே! திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

இந்த குரு மாற்றம் தோல்வியால் துவண்டு கிடந்த உங்களுக்கு ராஜயோகத்தைத் தருவதுடன், எங்கும் எதிலும் வெற்றி வாகைசூட வைக்கும்.
பரிகாரம்: 

மதுரை மாவட்டம் பரவை எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீமுத்து நாயகி அம்மனை வெள்ளிக் கிழமையில் மல்லிகைப்பூ மாலை தந்து வணங்குங்கள். மேன்மேலும் முன்னேறுவீர்கள். 

மற்றவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்களே! 

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியையும், பதவி, புகழ், கௌரவத்தையும் தந்த குருபகவான் இப்போது 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை. நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி இருக்கும். எவ்வளவுதான் பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். எந்த ஒரு விஷயத் தையும் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு செய்யுங்கள். எதிர்காலத்தைக் குறித்த அச்சம் வந்து போகும். வழக்குகளில் பிற்போக்கான நிலையே காணப்படும். உங்களது திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். 

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், பிரச்னைகள் வெகுவாகக் குறையும். வெளியூர்ப் பயணங்களால் நிம்மதி கிட்டும். வேற்று மொழியினரின் ஆதரவு கிட்டும். கடந்த காலத்தில் உங்களால் பயனடைந்தவர்கள் தற்சமயம் உங்களுக்கு உதவ வாய்ப்பிருக்கிறது. புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 
 
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிர்ப்புகள் குறையும். முடிக்க முடியுமா என்று நினைத்த பல காரியங்கள் இப்போது முடியும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல் விலகும். அடகிலிருந்த நகைகள், பத்திரங்களை மீட்க உதவிகள் கிட்டும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.  

20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் சஷ்டமாதி பதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அவ்வப் போது இனம் தெரியாத அச்சம் ஏற்படும். சிலருக்கு அல்சர் வர வாய்ப்பிருக்கிறது. 

உங்கள் தைரிய ஸ்தானாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல் வதால், நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். இளைய சகோதர வகையில் மதிப்பு கூடும். வழக்குகள் சாதகமாகும்.

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 9-ம் வீட்டில் குரு அமர்வதால், அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், உங்களுக்கு சிலர் உதவுவதாகச் சொல்லி உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படு வீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆன்மித்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.  

வியாபாரத்தில், மற்றவர்களை நம்பி புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். போட்டிகளால் லாபம் குறையும். கடையை மாற்ற வேண்டிய நிர்பந்தம் சிலருக்கு உண்டாகும்.  கமிஷன், பெட்ரோ கெமிக்கல், மின்சார சாதனங்கள், மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டி வரும். சிலர் உத்தியோகத்தின் பொருட்டு அயல்நாடு செல்வீர்கள். நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக்கூட போராடிப் பெற வேண்டி வரும். 

மாணவ-மாணவிகளே! மறதி ஏற்படும் என்பதால், பாடங்களை கவனமாகப் படித்து, அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வது அவசியம்.

கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்னச் சின்ன வாய்ப்பு களையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, விடாமுயற்சியால் உங்களின் இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: 

வேதாரண்யம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவேதநாயகி உடனுறை ஸ்ரீதிருமறைக்காடரை பூசம் அல்லது சுவாதி நட்சத்திர நாளில் பாலாபிஷேகம் செய்து வணங்குங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

இயற்கையை உணரும் சக்தி கொண்டவர்களே! 

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துகொண்டு, பலவகைகளிலும் உங்களை சிரமப்படுத்திய குருபகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப் பதால், தன்னம்பிக்கை கூடும். 

தடைப்பட்ட திருமணம் கூடிவரும். கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் கூடும்.

குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டைப் பார்ப்பதால், நினைத்த காரியம் சுலபமாக முடியும். ஷேர் மூலம் பணம் வரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 

குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால், துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சியை ஆதரிப்பார். அவரின் ஆரோக்கியம் சீராகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.  
   
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். வீடு, மனை வாங்கு வது, விற்பது லாபகரமாக முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், திட்டமிடாத செலவுகள் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். இனம் தெரியாத கவலைகள் வந்து போகும். 
  
20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். மகனுக்கு நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். 

உங்கள் தனாதிபதியும் பாக்கியாதிபதியு மான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 

1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குரு செல்வதால், எதையும் சாதிக்கும் துணிவு வரும். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களின் ஆதரவு பெருகும். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும். 

17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 8-ம் வீட்டில் குரு மறைவதால், எதிலும் ஆர்வ மின்மை, காரியத் தாமதம், சிறுசிறு விபத்துகள், வேலைச்சுமை வந்து போகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சொத்துப் பிரச்னை தலை தூக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டி வரும். சகோதரர்கள் அதிருப்தி அடைவார்கள். 

வியாபாரம் விறுவிறுப்படையும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் மதிப்பார்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஸ்பெக்குலேஷன், இறக்குமதி, ஜுவல்லரி வகைகளால் லாபமடைவீர்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். 

உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்கள் மதிக்கத் தொடங்குவார்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிட்டும். பதவி உயர்வு கிடைக்கும்.
மாணவ-மாணவிகளே! எண்ணங்கள் பூர்த்தியாகும். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில், எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள். 

கலைத்துறையினரே! வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மக்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். 

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, கஷ்டங்களில் மூழ்கிக் கிடந்த உங்களை கலகலப்பாக்குவதுடன், வெற்றியையும், அதிரடி வளர்ச்சியை தருவதாகவும் அமையும்.
பரிகாரம்:
 
கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகரும்பாயிரம் பிள்ளையாரை ஏதேனும் ஒரு சதுர்த்தி திதி நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங் கள். சாதனை படைப்பீர்கள்.